Published : 29,Mar 2021 09:21 PM

’’எனக்கு இஞ்சியே மிஞ்சியது’’ - தேர்தல் ஆணையம் ஒதுக்கிய சின்னங்கள் குறித்து வேட்பாளர்கள்

Candidates-feels-bad-about-the-symbols-which-election-commission-allotted

தமிழக தேர்தல் களத்தில் அதிக அளவு வேட்பாளர்கள் உள்ள நிலையில் பலருக்கு காமெடியான சின்னங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. சின்னத்தின் பெயர்களை கேட்டாலே வாக்காளர்கள் சிரிப்பதாக வேதனையடைகின்றனர் பல வேட்பாளர்கள். அப்படி என்னென்ன சின்னங்கள் என்பதை காண்போம்.

அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் அவரவரது கட்சி சின்னங்களில் போட்டியிட, சிறிய கட்சிகளுக்கும், சுயேச்சை வேட்பாளர்களும் தேர்தல் ஆணையமே சின்னங்களை ஒதுக்குகிறது. ஒவ்வொரு தேர்தலிலும் தமிழகத்தில் தான் அதிக அளவு வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். இந்த தேர்தலிலும் 234 தொகுதிகளில் 3 ஆயிரத்து 998 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

image

சராசரியாக ஒரு தொகுதிக்கு 17 பேர் அண்மையில் நடைபெற்ற பீகார் தேர்தலில் 3 ஆயிரத்து 773 பேர் போட்டியிட்டனர். சராசரியாக தொகுதிக்கு 15 பேர் 2019 ஆம் ஆண்டு ஆந்திரா தேர்தலில் 2 ஆயிரத்து 118 வேட்பாளர்கள் களம் கண்டனர். இங்கு சராசரி என்பது தொகுதிக்கு 12 பேராக இருந்தது உத்தரபிரதேசத்தில் கூட 2017ஆம் ஆண்டில் 403 தொகுதிகளில் 4 ஆயிரத்து 853 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

சராசரியாக இங்கும் தொகுதிக்கு 12 பேரே அதிக அளவு வேட்பாளர்கள் சுயேச்சையாகவே போட்டியிடுவதால் அவர்களுக்கு பலதரப்பட்ட சின்னங்களை ஒதுக்க வேண்டிய சூழலுக்கு தேர்தல் ஆணையம் தள்ளப்படுகிறது. அதன்படி தமிழகத்தில் அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 77 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அவர்களில் 68 பேர் சுயேச்சைகள் என்பதால், அனைவருக்கும் சின்னம் ஒதுக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் காய்கறிகள், பழங்கள் என உணவுப் பொருட்களையும், பேட், பால், ஸ்டம்ப், பெல்ட், ஸ்கிப்பிங் கயிறு போன்ற சின்னங்களும் வேட்பாளர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

image

கரூர் தொகுதியில் போட்டியிடும் சாமியப்பன் என்ற சுயேச்சை வேட்பாளருக்கு இஞ்சி சின்னமே ஒதுக்கப்பட்டுள்ளது. இஞ்சி சின்னத்துக்கு வாக்கு சேகரிக்கவே தயக்கமாக இருப்பதாக கூறுகிறார் அந்த வேட்பாளர். இஞ்சி சின்னம் பொறிக்கப்பட்ட வாகனத்தை கண்டாலே வாக்காளர்கள் சிரிப்பதாகவும், தான் ஆட்டோ சின்னம் கேட்டதாகவும் ஆனால் இஞ்சியே மிஞ்சியதாகவும் அவர் வேதனை தெரிவித்துள்ளார். இதேபோல், போளூர் தொகுதி சுயேச்சை வேட்பாளர்களுக்கு பட்டாணி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. பச்சை மிளகாய், நூடுல்ஸ் பவுல், ரொட்டி, பிஸ்கட் சின்னங்கள் ஒதுக்கப்பட்ட வேட்பாளர்களின் நிலையும் பரிதாபம்தான்.

இப்படித் தான் துடைப்பம் சின்னம் கூட முதலில் காமெடியாக பார்க்கப்பட்டது. ஆனால் ஆம் ஆத்மி கட்சியினர் அந்த சின்னத்தை வெற்றிச் சின்னமாக மாற்றியிருப்பது சுயேச்சைகளுக்கு மிகப்பெரிய ஆறுதல்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்