[X] Close

ஆட்டத்துக்கு ரெடி... பயிற்சியை தொடங்கிய சிஎஸ்கேவின் புஜாரா, ராபின் உத்தப்பா..!

ஐபிஎல் திருவிழா

Good-to-be-wearing-Yellow-Cheteshwar-Pujara-Robin-Uthappa-begin-training-in-Mumbai

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 14-வது சீசன், ஏப்ரல் 9-ம் தேதி தொடங்கி மே 30-ம் தேதி நிறைவடைகிறது. சென்னை, மும்பை, கொல்கத்தா, ஆமதாபாத், தில்லி, பெங்களூரு ஆகிய 6 நகரங்களில் ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. எனினும் கொரோனா தொற்று காரணமாக, முன்னெச்சரிக்கையாக தொடக்க ஆட்டங்களில் ரசிகர்களுக்கு அனுமதி அளிப்பதில்லை என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸும் ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதுகின்றன.


Advertisement

கொரோனா தடுப்பு மருத்துவ உயிர் பாதுகாப்பு வளையம் அமைத்து போட்டி நடைபெறுவதாலும், கடும் கட்டுப்பாடுகள் எதிரொலியாவும் இந்த முறை எந்தவொரு அணிக்கும் சொந்த ஊரில் போட்டிகள் கிடையாது. பொதுவான இடத்தில் தான் அனைத்து ஆட்டங்களும் நடத்தப்படுகிறது. ரசிகர்களுக்கும் அனுமதி இல்லை.

நடப்பு ஐபிஎல் தொடருக்கான முதல் அணியாக பயிற்சி முகாமை தொடங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் பயிற்சியை தொடங்கிவிட்டது. அதேபோல் ஐபிஎல் தொடர் அறிவிப்பிற்கு முன்னதாகவே சென்னையில் தனது பயிற்சி முகாம் குறித்த அறிவிப்பை வெளியிட்டு அதை செயல்படுத்தியது சிஎஸ்கே.


Advertisement

இந்திய டெஸ்ட் அணியின் தலைசிறந்த பேட்ஸ்மேனான புஜாரா, முதல்முறையாக சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிக்காக விளையாடவுள்ளார். இதற்காக மும்பையில் அணியினருடன் பயிற்சியை தொடங்கியுள்ளார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம் பெற்றிருந்த முக்கியத் தொடக்க ஆட்டக்காரர் ராபின் உத்தப்பா, டிரேடிங் முறையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மாற்றப்பட்டார். புஜாராவுடன், ராபின் உத்தப்பா, கே கவுதம் ஆகியோரும் மும்பையில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

image

இதுகுறித்து புஜாரா கூறுகையில், "களத்தில் நிற்பதை மகிழ்ச்சியாக உணர்கிறேன். மஞ்சள் ஜெர்ஸி அணிந்து விளையாடும் நாளை ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்’’ என்றார்.


Advertisement

இந்த முகாமில் சிஎஸ்கே கேப்டன் தோனி, ருதுராஜ், ராயுடு, புஜாரா உள்ளிட்டவர்களை பார்க்க முடிந்தது. தனது பிட்னசை நிரூபித்து அணியில் இணைந்துள்ள ரவீந்திர ஜடேஜா, 7 நாட்கள் குவாரன்டைனில் ஈடுபட உள்ளார். இதையடுத்து அவரும் பயிற்சி முகாம்களில் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கலாம்.

இங்கிலாந்து அணி வீரர்களான சாம் குர்ரான் மற்றும் மொயீன் அலி ஆகியோர் இன்று மும்பையில் அணியினருடன் இணைந்தனர். இங்கிலாந்து அணிக்கெதிராக விளையாடிய இந்திய வீரர்கள் சில நாள்கள் ஓய்வு எடுத்துவிட்டு நேரடியாக தங்களுடைய ஐபிஎல் அணியினருடன் இணைகிறார்கள்.


Advertisement

Advertisement
[X] Close