கமல் திரைப்பட நடிகர் மட்டும்தான்: முதலமைச்சர் பழனிசாமி

கமல் திரைப்பட நடிகர் மட்டும்தான்: முதலமைச்சர் பழனிசாமி
கமல் திரைப்பட நடிகர் மட்டும்தான்: முதலமைச்சர் பழனிசாமி

கமல்ஹாசன் திரைப்பட நடிகர் மட்டும்தான் என முதலமைச்சர் பழனிசாமி கூறினார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நீட் விவகாரம் தொடர்பாக பிரதமரையும், மத்திய அமைச்சர்களையும் நேரில் சந்தித்து கோரிக்கை விடுக்கப்பட்டிருப்பதாக கூறினார். கோவையில் மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் விரைவில் தொடங்குமென்றும் முதலமைச்சர் தெரி‌வித்தார்.

எம்எல்ஏ ஆறுக்குட்டி தங்களது அணிக்கு வந்தால் நிச்சயம் ஏற்றுக்கொள்வோம் என்ற முதலமைச்ச‌ர் எடப்பாடி பழனிசாமி கட்சியிலிருந்து சிலர் பிரிந்து சென்றாலும் அணி ஒன்றுதான் என்றும் கூறினார். கமல்ஹாசன் திரைப்பட நடிகர் மட்டும்தான் எனக்கூறிய முதலமைச்சர், அவர் அரசியலுக்கு வரும்போது அவருக்கு தகுந்த கருத்தை தெரிவிப்போம் என்று தெரிவித்தார்.

டெங்கு பற்றிக் கூறுகையில், மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது, நீண்ட நாட்கள் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்வது போன்று டெங்குவை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்து வருவதாக முதலமைச்சர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com