[X] Close

“கோரிக்கைகளை நிறைவேற்றாத அரசியல் கட்சிகள்” - நுழையக்கூடாது என பேனர் வைத்த கிராமம்

தமிழ்நாடு,சுடச்சுட

Political-parties-that-do-not-enter-village

கோரிக்கைகளை நிறைவேற்றாத எந்த அரசியல் கட்சித்தலைவரும் தங்களது கிராமத்திற்குள் நுழையக்கூடாது என பேனர் வைத்த கிராமத்தினரை தேர்தல் நடத்தும் அதிகாரிகள் எச்சரித்தனர்.


Advertisement

வால்பாறை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட திவான்சாபுதூர் ஊராட்சியில் அமைந்துள்ள வடக்குபாறைமேடு கிராமத்தில் சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்தக்கிராமத்திற்கு செல்லவேண்டும் என்றால் கேரள எல்லையை தாண்டி செல்லவேண்டும். ஒரேயொரு துவக்கப்பள்ளியை கொண்ட இக்கிராமத்தைச் சேர்ந்த மாணவர்கள், மேற்கொண்டு படிக்க அங்கிருந்து 2 கிலோமீட்டர் பயணித்து
கேரளாவில் உள்ள உயர்நிலைப்பள்ளிக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை நிலவுகிறது.

image


Advertisement

இதுமட்டுமன்றி, கழிப்பிட வசதி இல்லாததால் திறந்தவெளியில் மலம் கழிக்கவேண்டிய நெருக்கடியான சூழ்நிலையும், கிராமத்தில் யாரேனும் இறந்துவிட்டால் அவர்களின் ஈமச்சடங்கை நடத்த கேரளாவில் உள்ள மயானத்திற்கு செல்ல வேண்டிய அவலநிலையும் நீடிக்கிறது.

image

இது குறித்து அப்பகுதிமக்கள் கூறும்போது, “ கல்வி முதல் ஈமச்சடங்கு வரை அனைத்திற்கும் கேரளாவை நம்பியுள்ள நாங்கள் ஒரு வழித்தடம் கூட இல்லாமல் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறோம். ஆகையால் இத்தனை நூற்றாண்டுகளாக எங்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்காத எந்த அரசியல் வாதியும் கிராமத்திற்குள் வரவேண்டாம் என்று பேனரை வைத்துள்ளோம்.”என்றனர்.


Advertisement

இதனை தேர்தல் நடத்தும் அதிகாரிகள் அப்புறப்படுத்தி, அப்பகுதி மக்களை எச்சரித்து சென்றனர்.


Advertisement

Advertisement
[X] Close