[X] Close

“மோடிக்கு தாடிதான் வளர்கிறது; தொழில்துறையில் வளர்ச்சி இல்லை” - மம்தா பானர்ஜி விமர்சனம்

பொதுக்களம்

Only-Grows-Beard-and-Names-Stadium-After-Himself-says-Mamata-Banerjee-On-PM

மோடிக்கு தாடிதான் வளர்ந்து கொண்டே போகிறது என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி விமர்சனம் செய்தார்.


Advertisement

294 தொகுதிகளை கொண்ட மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல் 8 கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி இன்று காலை 7 மணிக்கு முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது. மேலும், ஏப்ரல் 1, 6, 10, 17, 22, 26 மற்றும் 29 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது.

இத்தேர்தலில் ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கும் பாஜக-வுக்கும் இடையே நேரடி போட்டி ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. திரிணாமூல் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் தலைவரும், மேற்குவங்க முதலமைச்சருமான மம்தா பானர்ஜி பரப்புரை மேற்கொண்டார்.


Advertisement

image

அப்போது பேசிய அவர், “நாட்டில் தொழில்துறை வளர்ச்சி குறைந்துவிட்டது. ஆனால் மோடியின் தாடி மட்டுமே வளர்ந்து கொண்டே செல்கிறது. பிரதமர் மோடி தன்னை காந்திக்கு மேலே, ரவீந்திரநாத் தாக்கூருக்கு மேலே, ஏன் சில நேரங்களில் சுவாமி விவேகானந்தர் என்றே கூறிக்கொள்கிறார். சில நேரங்களில் மைதானங்களுக்கு தனது பெயரை வைத்துக்கொள்கிறார். ஒரு நாள் அவர் நாட்டையும் விற்று அதற்குப் பெயரிடுவார். மோடியின் மூளையில் ஏதோ தவறு உள்ளது. அவரது ஸ்க்ரூ தளர்ந்துவிட்டதுபோல தெரிகிறது” என்றார்.


Advertisement

Advertisement
[X] Close