Published : 25,Mar 2021 09:13 AM

பிரேமலதா விஜயகாந்திற்கு கொரோனா நெகட்டிவ்

Corona-Negative-for-Premalatha-vijayakanth

தேமுதிக பொருளாளரும், விருத்தாச்சலம் தொகுதி தேமுதிக வேட்பாளருமான பிரேமலதா விஜயகாந்துக்கு கொரோனா இல்லை என பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

அமமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேமுதிக 60 தொகுதிகளில் போட்டியிடுகிறது. கட்சியின் பொருளாளரும், விஜயகாந்தின் மனைவியுமான பிரேமலதா, விருத்தாச்சலம் தொகுதியில் போட்டியிடுகிறார். இதற்காக கடந்த 18 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது பிரேமலதாவின் சகோதரரும், தேமுதிக துணைச் செயலாளருமான எல்.கே.சுதீஷ் உடனிருந்தார்.

இந்த நிலையில் சுதீஷுக்கும் அவரது மனைவிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து பரப்புரையில் இருந்த பிரேமலதாவை, கொரோனா பரிசோதனைக்கு வருமாறு சுகாதாரத்துறை அதிகாரிகள் அழைப்பு விடுத்தனர். நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் பிரேமலதா உள்ளிட்ட 12 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் பிரேமலதாவுக்கு நெகட்டிவ் என வந்துள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்