Published : 22,Jul 2017 07:23 AM

பாக். நிதியை நிறுத்திய அமெரிக்கா

america-stops-funds-for-pakistan

தீவிரவாதத்திற்கு எதிராக எந்த நடவடிக்கையும் இல்லை என்பதால் பாகிஸ்தானுக்கு வழங்க வேண்டிய 350 மில்லியன் டாலர் ராணுவ நிதியை அமெரிக்கா நிறுத்தி வைத்துள்ளது.

அமெரிக்க நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு அமைச்சர் ஜேம்ஸ் மாட்டீஸ், ஹக்கானி பயங்கரவாத அமைப்புக்கு எதிராக பாகிஸ்தான் கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளது என உறுதியாக கூற முடியாது எனக்கூறினார். இதனையடுத்து அந்நாட்டிற்கு வழங்க வேண்டிய நிதியை நிறுத்தி வைக்க அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் முடிவு செய்துள்ளது. கடந்த வருடமும் பாகிஸ்தானுக்கு வழங்க வேண்டிய 300 மில்லியன் டாலர் நிதியை பென்டகன் நிறுத்தி வைத்திருந்தது. பாகிஸ்தானில் அந்நாட்டு அரசின் ஆதரவுடன் பல தீவிரவாத குழுக்களும், அமைப்புகளும் சுதந்திரமாக செயல்பட்டு வருவதாகவும், அந்த குழுக்கள் அண்டை நாடுகளில் பல்வேறு தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்நிலையில் பாகிஸ்தான் அரசின் இந்த இரட்டை வேஷத்துக்கு கண்டனம் தெரிவித்த அமெரிக்கா, தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளை ஆதாரத்துடன் நிரூபிக்கும்படி பாகிஸ்தானுக்கு தெரிவித்திருந்தது. ஆனால் இதனை செய்ய பாகிஸ்தான் தவறியதை தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு வழங்க வேண்டிய நிதியை இரண்டாவது முறையாக அமெரிக்கா தற்போது நிறுத்தியுள்ளது. 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்