Published : 24,Mar 2021 05:39 PM

விஜயுடன் இணைகிறார் ’புட்ட பொம்மா’ புகழ் பூஜா ஹெக்டே - வெளியானது விஜய் 65 அப்டேட்

The-gorgeous--hegdepooja-onboard-as-the-female-lead-of--Thalapathy65

இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் புதியப்படத்தில் கதாநாயகியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்க இருப்பதாக அதிகாரப் பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

கோலமாவு கோகிலா’, ‘டாக்டர்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய ‘நெல்சன் திலீப்குமார்’ இயக்கும் புதிய படத்தில் விஜய் நடிக்கிறார். இதற்கான முதற்கட்ட வேலைகள் தற்போது நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பிற்காக படக்குழு ரஷ்யா சென்றதாக தகவல் வெளியானது.

image

நாயகிக்கான தேர்வில் மாளவிகா மோகனன், ராஷ்மிகாமந்தனா, பூஜா ஹெக்டே ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்ட நிலையில், விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க இருப்பதாக சொல்லப்பட்டது. 

image

அது குறித்து பேட்டி ஒன்றில் விளக்கம் அளித்த பூஜா பேச்சுவார்த்தை நடந்ததாகவும், ஆனால் அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் படக்குழு சார்பில் சொல்லப்படவில்லை என்று கூறினார்.

இந்த நிலையில், தற்போது விஜய் 65 படத்தில் கதாநாயகி ஆக பூஜா ஹெக்டே இணைவதாக பட தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. அனிருத் இசையமைக்கும் இந்தப்படத்திற்கு அன்பறிவு சண்டை இயக்குநர்களாக பணியாற்றுகின்றனர். 

பூஜா ஹெக்டே தமிழில் முகமூடி படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து தொடர்ச்சியாக தெலுங்கில் நடித்து வருகிறார். ரங்கஸ்தலம், அல வைகுந்தபுரம்மலு உள்ளிட்ட படங்களில் நடித்து இருந்தார். தற்போது பிரபாஸ் உடன் ராதே ஷ்யாம் படத்தி நடித்து வருகிறார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்