[X] Close

“இனவெறியை ஏற்றுக்கொள்ளவே முடியாது” - ஆசிய ஊழியர்களுக்கு ஆதரவாக சுந்தர் பிச்சை குரல்

உலகம்

Google-CEO-Sundar-Pichai-sent-consoling-messages-to-their-employees-following-asian-hate-crimes-rise-in-America

கொரோனா தொற்றின் தாக்கத்தை தொடர்ந்து அமெரிக்காவில் ஆசியாவை சேர்ந்தவர்களுக்கு எதிராக குற்ற சம்பவங்கள் நடப்பது அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தனது ஊழியர்களுக்கு மின்னஞ்சல் மூலம் கடந்த வாரம் இந்த விவகாரம் தொடர்பாக ஆறுதல் சொல்லியுள்ளார். 


Advertisement

“தொடர்ந்து வரும் செய்திகள் நமக்கு பாரத்தை கொடுக்கின்றன. உங்களுக்கு ஏதேனும் உதவி தேவைப்பட்டால் தயங்காமல் உங்களது மேலாளர் மற்றும் சக குழு உறுப்பினர்களையும் தொடர்பு கொள்ளுங்கள். ஆசிய மற்றும் பசிபிக் தீவுகளை சேர்ந்த மக்களுக்கு எதிரான வன்முறை, இனவெறி மற்றும் பாலியல் சீண்டல்களை ஒருபோதும் எந்த வடிவிலும் அனுமதிக்க முடியாது” என அவர் அந்த மின்னஞ்சலில் அவர் சொல்லி உள்ளதாக தெரிகிறது. 

ஆசிய மக்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் வன்முறையை கண்டித்து கடந்த பிப்ரவரி வாக்கி சுந்தர் பிச்சை ட்வீட் ஒன்றும் பதிவு செய்தார். 


Advertisement

அமெரிக்காவில் அண்மைய காலமாக ஆசிய மக்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. அட்லாண்டாவில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த 8 பேரில் 6 பேர் ஆசியாவை சேர்ந்தவர்கள். மேலும் கூகுள் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களில் 41.9 சதவிகிதம் ஊழியர்கள் ஆசியாவை சார்ந்தவர்கள் எனவும் புள்ளிவிவரங்கள் சொல்கின்றன.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close