[X] Close

மன்னார்குடி: மருத்துவமனையிலுள்ள தந்தைக்கு பதிலாக பரப்புரை செய்யும் இளம்வயது மகன்

சுடச்சுட

Mannargudi--A-young-son-campaigning-for-his-father-in-hospital-

மன்னார்குடி சட்டமன்றத் தொகுதி அமமுக  வேட்பாளர் எஸ்.காமராஜ், உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவரது மகன் ஜெயந்திரன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.


Advertisement

தமிழகம் முழுவதும் அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் வேட்பாளர்களும் தொண்டர்களும் இரவு பகல் பாராமல் பம்பரம்போல் சுழன்று கட்சி பணியாற்றி வருகின்றனர். மன்னார்குடி சட்டமன்ற தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் எஸ்.காமராஜ் போட்டியிடுகிறார். அவர் மன்னார்குடியில் உள்ள பல்வேறு கிராமங்களுக்கும் சென்று பரப்புரை செய்து வந்தார்.

image


Advertisement

கடந்த  சனிக்கிழமை இரவு டி.டி.வி.தினகரன் மன்னார்குடி வருகை தந்தார். அப்போது இரவு பத்து மணி வரை அமமுக வேட்பாளர் எஸ்.காமராஜ், இளைஞர்கள் மத்தியில் மிகவும் உற்சாகமாக பரப்புரை செய்தார். பின்னர் அன்று இரவு வீட்டில் இருந்தபோது 12மணி அளவில் காமராஜ்க்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. இதனால் அவர் உடனடியாக தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தற்போது அவர் தீவிர சிகிச்சை பிரிவிலிருந்து மாற்றப்பட்டு நலமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் அமமுக வேட்பாளர் எஸ்.கமாராஜின் மகன் ஜெயந்திரன் தன் தந்தைக்காக தேர்தல் பரப்புரை செய்து வருகிறார். மன்னார்குடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட காளஞ்சிமேடு, குறுவைமொழி உள்ளிட்ட பல கிராமங்களிலும் அமமுக சார்பில் தன் தந்தை எஸ்.காமராஜ் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது மகன் ஜெயந்திரன் தீவிர பரப்புரை மேற்கொண்டார்.

image


Advertisement

தந்தை உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது மகன் ஜெயந்திரன் தன் தந்தைக்காக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளது அமமுக தொண்டர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement

Advertisement
[X] Close