[X] Close

தேவேந்திரகுல வேளாளர் மசோதாவுக்கு மாநிலங்களவையும் ஒப்புதல்!

தமிழ்நாடு

Devendrakula-Velalars-bill-passed-in-Rajya-Sabha

தேவேந்திரகுல வேளாளர் மசோதாவுக்கு மக்களவையை தொடர்ந்து மாநிலங்களவையும் ஒப்புதல் அளித்துள்ளது


Advertisement

குடும்பன், காலாடி, பண்ணாடி, கடையன், பள்ளன், தேவேந்திர குலத்தான், வாதிரியார் ஆகிய ஏழு பட்டியலின உட்பிரிவுகளைச் சேர்ந்தவர்களை தேவேந்திர குல வேளாளர் என்ற பொதுப்பெயரில் அழைப்பதற்கான மசோதாவை மத்திய அரசு அண்மையில் கொண்டுவந்தது.

image


Advertisement

இதை மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் தாவர்சந்த் கெலோட் நேற்று அறிமுகம் செய்தநிலையில், அ.தி.மு.க உறுப்பினர் நவநீதகிருஷ்ணன், காங்கிரஸ் கட்சியின் மல்லிகார்ஜுன கார்கே, மத்திய அமைச்சர் ராமதாஸ் அதவாலே உள்ளிட்டோர் இதன் மீதான விவாதத்தில் பங்கேற்றனர். அதன் பின் இந்த மசோதா எதிர்ப்பு ஏதுமின்றி குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது. இந்த மசோதாவுக்கு ஏற்கனவே மக்களவை ஒப்புதல் அளித்துள்ள நிலையில், தற்போது மாநிலங்களவையும் ஒப்புதல் அளித்துள்ளது.

image

தமிழக அரசின் பரிந்துரை அடிப்படையில் தமிழகத்துக்கான ஆதி திராவிடர் பட்டியலில் சட்டத்திருத்தம் கொண்டு வர நாடாளுமன்றம் தற்போது ஒப்புதல் அளித்துள்ள நிலையில், அடுத்து குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன் மசோதா சட்டமாக உள்ளது. தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close