[X] Close

ஆம்புலன்ஸ் கிடைக்காததால் உடலைக் கட்டிலில் தூக்கிச் சென்ற மக்கள்

MP--Villagers-carried-body-of-man-on-a-cot-due-to-unavailability-of-ambulance

மத்தியப் பிரதேசத்தில் மழை வெள்ளத்தில் உயிரிழந்தவரின் உடலைக் கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் வாகனம் கிடைக்காததால் கட்டிலில் வைத்து தூக்கிச் சென்றுள்ளனர்.  


Advertisement

மத்தியப் பிரதேசம், ஆந்திரா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கடந்த சில தினங்களாக கொட்டும் கனமழையின் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு இயல்பு வாழ்க்கை அடியோடு முடங்கியுள்ளது. பலத்த மழை காரணமாக, சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வீடுகளில் வெள்ள நீர் புகுந்துள்ளதால் பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். மழை வெள்ளத்தில் சிக்கி பலர் பலியாகி வரும் நிலையில், அவர்களின் ஈமச்சடங்கு கூட தண்ணீர் சூழ்ந்த பகுதிகளிலே நடைபெறும் அவலமும் அரங்கேறி வருகிறது. 

இந்நிலையில் கனமழை காரணமாக செஹோர் என்ற கிராமத்தில் வெள்ளப்பெருக்கு காரணமாக ஆம்புலன்ஸ் வரமுடியாததால் மழை வெள்ளத்தில் உயிரிழந்தவரின் உடலை கிராம மக்கள் கட்டிலில் வைத்து தூக்கிச் சென்று அடக்கம் செய்தனர். 


Advertisement

வீடியோ


Advertisement

Advertisement
[X] Close