[X] Close

"முதல்வராவதற்கு கொஞ்சம் ராசி வேண்டும்; அது, ஸ்டாலினுக்கு இல்லை" - எடப்பாடி பழனிசாமி

சுடச்சுட

Need-a-little-zodiac-sign-to-come-first-says-edappadi-palanisamy

"முதல்வராவதற்கு கொஞ்சம் ராசி வேண்டும்; அது, ஸ்டாலினுக்கு இல்லை" என்று தமிழக முதல்வரும், அதிமுக கூட்டணியின் முதல்வர் வேட்பாளருமான எடப்பாடி பழனிசாமி கூறினார்.

இதுகுறித்து தேர்தல் பிரசாரத்தில் பேசிய முதல்வர் பழனிசாமி, “முதல்வராவதற்கு கொஞ்சம் ராசி வேண்டும். அந்த ராசி ஸ்டாலினுக்கு இல்லை. திறமையும் உழைப்பும் இல்லாமல் ஸ்டாலினால் எப்படி முதல்வராக முடியும்? 4 ஆண்டுகளுக்கு முன் 'என்னை தெரியாது' எனக் கூறிய ஸ்டாலின், தற்போது என்னைப் பற்றி பேசுகிறார்.

நான் கிராமத்துக்காரன், விவசாயி என நினைத்து ஆட்சியை கலைக்க நினைத்தார் ஸ்டாலின். ஆட்சிக் கவிழ்ப்பு பற்றி ஸ்டாலின் தொடர்ந்து பேசும்போது அதிமுகவினரே சந்தேகம் அடைந்தனர். இந்த கை மண்வெட்டி பிடித்த கை. எதைக்கண்டும் அஞ்சமாட்டேன்” என்றார் எடப்பாடி.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close