
சென்னை கிழக்கு கடற்கரை சாலை கொட்டிவாக்கத்தில், சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீபிடித்ததில், கார் முழுவதும் எரிந்து நாசமானது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
செப்பை மடிப்பாக்கத்தை சேர்ந்த கைலாசம் என்பவர் திருவான்மியூரில் உள்ள கோவிலுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. கொட்டிவாக்கம் அருகே வந்தபோது கார் திடீரென தீப்பற்றி எரிந்தது. இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த கைலாசமும் அவரது குடும்பத்தினரும் உடனடியாக காரை சாலையோரமாக நிறுத்திவிட்டு காரில் இருந்து வெளியேறி உயிர்தப்பினர். இத்தீவிபத்தின் காரணமாக அருகில் இருந்த மருத்துவமனையின் ஏ.சி.-யில் தீ பரவியதையடுத்து அங்கிருந்த நோயாளிகள் பாதுகாப்பு காரணங்களுக்காக வெளியேற்றப்பட்டனர்.