Published : 22,Mar 2021 02:15 PM

நயன்தாராவின் மலையாளப் படம் ’நிழல்’ ஏப்ரல் வெளியீடு

Nayanthara-s-Nizhal-movie-to-release-in-April

நயன்தாரா மலையாளத்தில் நடித்துவரும் நிழல் படம் ஏப்ரல் மாதம் வெளியாகவிருக்கிறது.

கடந்த 2019 ஆம் ஆண்டு நயன்தாரா மலையாளத்தில் நிவின் பாலி ஜோடியாக நடித்த ‘லவ் ஆக்‌ஷன் டிராமா’ படம் வெற்றி பெற்றதோடு, ’குடுக்கு பட்டிய குப்பாயம்’ பாடல் வைரல் ஹிட் ஆனது. அதனால், மீண்டும் பிரபல படத்தொகுப்பாளர் அப்பு என். பட்டாத்திரி இயக்கத்தில் ’நிழல்’ படத்தில் நடித்து வருகிறார். த்ரில்லர் படமான இதில் நயன்தாராவுக்கு ஜோடியாக குஞ்சாக்கோ போபன் நடிக்கிறார்.

image

ஏற்கனவெ, குஞ்சாக்கோ போபனுடன் ’ட்வென்டி 20’ படத்தில் சிறிய வேடத்தில் நயன்தாரா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது 12 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இணைந்துள்ளனர். இந்நிலையில், நிழல் படம் வரும் ஏப்ரல் 4 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் இன்னும் அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகவில்லை. இதனால் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்