[X] Close

பெங்களூரூ டூ சென்னை: ரூ. 1 கோடி மதிப்பிலான கடத்தல் குட்கா பறிமுதல்

தமிழ்நாடு

Bangalore-to-Chennai-Rs-1-crore-worth-of-smuggled-Gutka-seized

சென்னை அருகே காவல் துறையினரின் ரகசிய சோதனையில் பெங்களூருவில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ. 1 கோடி மதிப்பிலான குட்கா பொருட்களை காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.


Advertisement

சென்னையில் போதை பொருட்களை தடுக்கும் பொருட்டு காவல்துறை ஆணையரின் உத்தரவின் பேரில், செங்குன்றத்தை அடுத்துள்ள பாடியநல்லூர் சோதனைச்சாவடியில், மாதவரம் துணை ஆணையர் கிருஷணராஜ் தலைமையிலான தனிப்படை போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது லாரி ஒன்றில் அரசால் தடை செய்யப்பட்ட ரூ. 3 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்கள் இருப்பது தெரியவந்தது.

image


Advertisement

இதனை தொடர்ந்து, அந்த வாகனத்தின் ஓட்டுநர் கும்மிடிபூண்டி பெருமாள் தெருவை சேர்ந்த சுப்பிரமணி என்பவரின் மகன் கஜேந்திரன் மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த கஜா என்பவரையும் பிடித்து தீவிரமாக விசாரணை செய்தனர். அப்போது அவர்கள் திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே உள்ள நாலூர் கிராமத்தில் உள்ள ஒரு வாகன நிறுத்தத்தில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு கிருஷ்ணகிரியில் இருந்து லாரியில் புகையிலைப் பொருட்களை கடத்தி வந்து விற்பனை செய்யப்படுவதாக தகவல் அளித்தனர்.

அதன் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற தனிப்படை காவல் துறையினர், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 லாரிகளையும் 4 டாடா ஏஸ் வாகனங்களையும் சோதனை செய்தனர். அப்போது அதில் சுமார் ரூ. 1 கோடி மதிப்புள்ள புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அங்கிருந்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த காவலாளிகள் மற்றும் ராஜ் என்பவரையும் கைது செய்து செங்குன்றம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

image


Advertisement

இதுகுறித்து செங்குன்றம் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் சங்கர் வழக்குப்பதிவு செய்து குட்கா கடத்தி வந்த 2 லாரியையும் 4 டாடா  ஏஸ் வாகனங்கள் 7.6 டன் எடையுள்ள 11 வகையான குட்கா பொருட்களையும் பறிமுதல் செய்தனர். இதற்கு காரணமான கஜா (33), கஜேந்திரன் (39), ராஜி (37) ஆகிய 3 பேர்  கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்


Advertisement

Advertisement
[X] Close