Published : 22,Jul 2017 02:25 AM
மனைவியை கொன்ற கணவர் - 17வருடத்திற்கு பின் சரணடைந்தார்

மகாராஷ்திராவில் மனைவியை எரித்துக் கொன்ற கணவன் 17 வருடங்களுக்கு பின்னர் செய்த தவறுக்காக வருந்தி நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.
மகாராஷ்திரா மாநிலம் நாந்தேட் மாவட்டத்தின் அருகே வசித்து வந்த பிராஜி மேக்தார். இவர் கடந்த 2000-ம் ஆண்டில் தனது மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்து
அவரை தீயிட்டு கொளுத்தி விட்டு அப்பகுதியிலிருந்து யாருக்கும் தெரியாமல் தலைமறைவானார். உடல் முழுவதும் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைகாக
அனுமதிக்கப்பட்டிருந்த அவரது மனைவி, மறுதினம் பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில் கடந்த 17 வருடங்களாக தலைமறைவாக வாழ்ந்து வந்த பிராஜி, தனது
தவறுக்கு வருந்தி அம்மாநிலத்தில் உள்ள போகர் நீதிமன்றத்தில் நேற்று சரணடைந்தார். இதனையடுத்து, அவரை வரும் 23-ம் தேதி வரை போலீஸ் காவலில் சிறையில்
அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.