[X] Close

“மும்பை இந்தியன்ஸ் வீரர்களை அதிகம் அணியில் சேருங்கள்” - மைக்கல் வாகன், ஜாஹிர் கான் கருத்து

விளையாட்டு

India-Versus-England-Fifth-T20I-match-Today-and-Michael-Vaughan-Zaheer-Khan-suggests-Indian-team-s-playing-elven-should-be-filled-with-players-of--IPL-Mumbai-Indians-Team

இங்கிலாந்து மற்றும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்களான மைக்கேல் வாகனும், ஜாகீர் கானும் இங்கிலாந்துக்கு எதிரான இன்றைய ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் இந்திய அணி ஆடும் லெவனில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து கருத்து தெரிவித்துள்ளனர். 


Advertisement

“ஐந்து போட்டிகள் இந்த தொடரில் நடந்து முடிந்துள்ள நான்கு போட்டிகளிலும் இந்திய அணிக்காக தொடக்க வீரராக களம் இறங்கியுள்ளது கே.எல். ராகுல் தான். ஆனால் அவர் பேட்டிங்கில் இதுவரை பெரிய பங்களிப்பை கொடுக்கவில்லை. அதனால் அவருக்கு மாற்றாக இஷான் கிஷன் உடற்தகுதியோடு இருந்தால் அவரை இந்தியா தொடக்க வீரராக களம் இறக்க வேண்டும். ராகுல் உறுதியுடன் ஆடவில்லை. அதனால் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள வீரர்களை அதிகளவில் இந்தியாவில் ஆட வைப்பது தான் சரியாக இருக்கும்” என வாகன் தெரிவித்துள்ளார். 

“வாஷிங்டன் சுந்தருக்கு மாற்றாக அக்சர் பட்டேலை களம் இறக்க வேண்டும். அதேபோல், கே.எல்.ராகுலுக்கு பதில் இஷான் கிஷனை களமிறக்க வேண்டும்” என ஜாகீர் கான் தெரிவித்துள்ளார். 


Advertisement

இந்த தொடர் இப்போதைக்கு 2 - 2 என சமநிலையில் உள்ளது. தொடரின் வெற்றியாளரை உறுதி செய்யும் டிஸைடர் இன்று நடைபெறுகிறது.


Advertisement

Advertisement
[X] Close