[X] Close

சென்னையில் கொடியேற்றினார் முதலமைச்சர் பன்னீர்செல்வம்..!

68th-Republic-day--CM-Pannerselvam-Hoists-flag-at-chennai

குடியரசு தின விழாவில் முதன் முறையாக, முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தேசியக் கொடியேற்றினார்.


Advertisement

சென்னையில் ஆண்டு தோறும் மெரினா கடற்கரையில், காந்தி சிலை அருகே அரசு சார்பில் குடியரசு தின விழா கொண்டாடப்படுகிறது. குடியரசு தினத்தில் மாநிலங்களில் ஆளுநர் கொடியேற்றுவது வழக்கம். தமிழக‌த்தில் பொறுப்பு ஆளுநராக உள்ள வித்யாசாகர் ராவ், மகாராஷ்ட்ரா ஆளுநராக பதவி வகிக்கிறார். மும்பையில் நடைபெறும் குடியரசு தின விழாவில் அவர் பங்கேற்பதால், சென்னையில் மூவர்ண தேசியக் கொடியை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றார்.

இதனைத் தொடர்ந்து பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு முதலமைச்சர் பன்னீர்செல்வம் விருது வழங்கி கவுரவித்தார். மேலும் பல்வேறு விதமான கண்கவர் கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன.


Advertisement

இந்தியா சுதந்திரம் அடைந்த பின் பொறுப்பு வகித்த 11 தமிழக முதலமைச்சர்களில், குடியரசு தின விழாவில் கொடியேற்றும் வாய்ப்பு முதன்முறையாக ஓ.பன்னீர்செல்வத்திற்கு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement
[X] Close