
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே காதல் போட்டியில் தோழியை கொன்று இளம் பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
புலியூர்காட்டுசாகை கிராமத்தைச் சேர்ந்த திவ்யா என்ற பெண்ணை கடந்த 2 மாதங்களாக காணவில்லை என தேடிவந்த நிலையில் அவரது தோழி சித்ரா, காதல் போட்டியில் விஷம் கொடுத்து திவ்யாவை கொன்று கெடிலம் ஆற்றில் புதைத்த சம்பவம் நேற்று தெரியவந்தது. இதையடுத்து சித்ராவை கைது செய்து அழைத்துச் சென்றபோது, அவர் தப்பியோடி கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார்.
இந்நிலையில், திவ்யா கொலையில் தொடர்புடையதாக கருதப்படும் திவ்யாவின் காதலர் மோகனை காவல்துறையினர் தேடிவந்த நிலையில் இன்று மாலை வழக்கறிஞர் முன்னிலையில் காவல்துறையினரிடம் அவர் சரணடைந்தார். இதற்கிடையே காவல்துறை விசாரணையில் இருந்த சித்ரா உயிரிழந்தது தொடர்பாக நீதி விசாரணை நடைபெற்று வருகிறது. பண்ருட்டி நடுவர் நீதிமன்ற நீதிபதி கணேஷ் இந்த விசாரணை மேற்கொண்டுள்ளார்.
முன்னதாக, தோழியை கொன்று தானும் தற்கொலை செய்துகொண்ட சித்ராவின் உடலை அவரது குடும்பத்தினர் வாங்க மறுத்ததையடுத்து போலீசாரே அவரது உடலை புதைத்தனர்.