”அரசியலுக்கு புதுசுங்க, அதான் நிர்வாகிகள் பெயர்கள் கூட தெரியல, கொஞ்சம் கேட்டு கேட்டே சொல்லுவோம்” என பரப்புரையில் திமுக திருச்சி கிழக்கு தொகுதி வேட்பாளர் இனிகோ இருதயராஜ் ஓப்பனாக பேசினார்.
திருச்சி கிழக்கு சட்டப் பேரவைத் தொகுதியின் திமுக வேட்பாளராக கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கத்தின் நிறுவனர் தலைவர் இனிகோ இருதயராஜ் போட்டியிடுகின்றார்.
தமிழகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கத்தின் நிறுவனத் தலைவராக உள்ள இனிகோ இருதயராஜ், கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் தொடங்கிய முதலே திமுக தலைவர் மறைந்த மு.கருணாநிதியையும், அவருக்குப் பிறகு ஸ்டாலினையும் சிறப்பு விருந்தினராக அழைத்து கிறிஸ்துமஸ் தினத்தன்று கேக் வெட்டி கொண்டாடுவது வழக்கம்.
திமுகவில் பெரிய அளவில் கட்சிப் பணி அனுபவம் இல்லாத இவருக்கு, திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி வேட்பாளராக வாய்ப்பு கிடைத்துள்ளது. இன்று நத்தர்ஷா பள்ளிவாசல்,மன்னார்புரம், இ.பி.ரோடு, ஓம்சக்தி வேல்முருகன் கோவில் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பிலும் பிரச்சாரத்திலும் ஈடுபட்டார்.
இவர் அரசியலுக்கு புதுசு என்பதால் பரப்புரையில் பேசுவதற்கு மிகவும் சிரமப்படுவதோடு, உடன் வரும் கட்சிக்காரர்கள் யார் என்று தெரியவில்லை என்பதால், ”அரசியலுக்கு புதுசுங்க, அதான் நிர்வாகிகள் பெயர்கள் கூட தெரியல, கொஞ்சம் கேட்டு கேட்டே சொல்லுவோம்” என வெளிப்படையாக பேசினார்.
Loading More post
“என்னிடம் ஏன் இந்தக் கேள்வியை கேட்கிறீர்கள்?” - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆவேசம்
பிளே ஆஃப் வாய்ப்பு யாருக்கு? டெல்லிக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் பேட்டிங் தேர்வு!
ரோகித், கோலியின் மோசமான ஃபார்ம் குறித்து கவலையில்லை - பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி
பாகிஸ்தானில் இரண்டு சீக்கியர்கள் சுட்டுக் கொலை - இந்தியா கடும் கண்டனம்
சர்ச்சைக்கு மத்தியில் தாஜ்மஹாலின் பூட்டிய அறைகளின் படங்களை வெளியிட்டது தொல்லியல் துறை!
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்
“சிறப்பான விஷயம் நடக்கப்போகிறது என்று நினைத்தோம்.. ஆனால்” - கோலி குறித்து மைக் ஹெசன்
’டான்’ விமர்சனம்: ’டாக்டர்’ வெற்றியை தக்க வைத்தாரா சிவகார்த்திகேயன்?