Published : 19,Mar 2021 01:02 PM

ஆட்டோவில் செல்லும் நடிகர் அஜித்! - வைரல் வீடியோ

Ajith-going-in-the-auto----Viral-video-

நடிகர் அஜித் ஆட்டோவில் செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

‘நேர்கொண்ட பார்வை’ வெற்றிக்குப்பிறகு அஜித்,ஹெச்.வினோத், போனி கபூர் கூட்டணி ‘வலிமை’ படத்தில் இணைந்துள்ளது. அஜித்துக்கு ஜோடியாக ஹீமா குரேஷி நடிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

image


இப்படத்தின் அப்டேட்டை கடந்த ஒரு வருடமாக ரசிகர்கள் கேட்டுவந்தனர். கிரிக்கெட் ஸ்டேடியம், மோடி வருகை என எல்லா இடங்களிலும் அப்டேட் கேட்ட நிலையில், அஜித் அதிரடி ஸ்டேட்மெண்ட் விட்டு அமைதி காக்க சொன்னார். அப்டேட்தான் கொடுக்கவில்லை. அஜித்தின் துப்பாக்கி சுடுதல் பயிற்சியில் ஈடுபடுதல், சைக்ளிங் செல்லுதல் என பல்வேறு புகைப்படங்கள் வெளியாகத் தொடங்கின. அதோடு, துப்பாக்கிச் சுடுதல் பயிற்சியில் அஜித் 6 பதங்கங்களையும் குவித்து அசத்தினார். தாங்களே வெற்றி பெற்றதுபோல் கொண்டாடினர் அஜித் ரசிகர்கள்.

இந்நிலையில், சமீபத்தில் ’வலிமை’ படத் தயாரிப்பாளர் போனிகபூர் அஜித்தின் 50-வது பிறந்தநாளையொட்டி ’வலிமை’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார். இதனால், அஜித் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கிறார்கள். தற்போது, அஜித் சாலையில் ஆட்டோவில் செல்லும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. சமீபதில் வெளியான புகைப்படங்களில் இருந்த கெட்டப்பிலேயே ஆட்டோவில் அஜித் இருக்கிறார் என்பதால் இந்த வீடியோ சமீபத்தில் எடுத்ததுதான். இதனை, எளிமையின் சிகரம் என்று கொண்டாடி வருகிறார்கள் அஜித் ரசிகர்கள்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்