[X] Close

தஞ்சை - 2.75 லட்சம் மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை

தமிழ்நாடு,கொரோனா வைரஸ்

Corona-testing-for-2-75-lakh-students-in-tanjore

தஞ்சையில் 100 மாணவ, மாணவிகளுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் 2.75 லட்சம் மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


Advertisement

தஞ்சையில் ஏற்கெனவே 7 பள்ளிகளில் 68 மாணவ, மாணவிகளுக்கு கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து இன்று புதிதாக 2 தனியார் பள்ளிகளில் 27 மாணவிகள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

மார்ச் 8 ஆம் தேதி அம்மாபேட்டை அரசு உதவி பெறும் பள்ளிகளில் 58 மாணவிகள் ஒரு ஆசிரியர், 9 பெற்றோருக்கு கொரோனா கண்டறியப்பட்டது. மார்ச் 13 ஆம் தேதி பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஒரு ஆசிரியருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. மார்ச் 18ஆம் தேதி மேக்ஸ்வெல் மெட்ரிகுலேசன் பள்ளியில் 21 மாணவர்கள், 2 ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் தஞ்சை கிறிஸ்துவ பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 2 ஆசிரியர்கள், 7 மாணவிகளுக்கு கொரோனா கண்டறியப்பட்டது.


Advertisement

அதே நாளில் கும்பகோணத்தில் உள்ள சரஸ்வதி பாடசாலையில் 6 மாணவிகள், ஒரு ஆசிரியருக்கு கொரோனா கண்டறியப்பட்டது. மேலும், ஒரத்தநாடு பகுதியில் உள்ள ஒரு லிட்டில் ரோஸ் பள்ளியில் 3 மாணவர்களுக்கு கொரோனா கண்டறியப்பட்டது. மார்ச் 19 ஆம் தேதி சாஸ்த்ரா பல்கலை கழக மாணவர்கள் இரண்டு பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
கொரோனா பாதிக்கப்பட்ட 5 பள்ளிகளுக்கு 2 வாரம் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

image

இந்நிலையில், தஞ்சை மாவட்டத்தில், 2.75 லட்சம் மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் தெரிவித்தார். மேலும், 14 கண்காணிப்புகுழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். இதன்படி தஞ்சை மாவட்டத்தில் உள்ள 439 பள்ளிகளில் 9-12 ஆம் வகுப்பு வரையுள்ள 2,75,185 மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட உள்ளது.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close