தினேஷ் சண்டிமால் விலகல்... இலங்கை அணிக்கு தலைமையேற்கிறார் ஹெராத்

தினேஷ் சண்டிமால் விலகல்... இலங்கை அணிக்கு தலைமையேற்கிறார் ஹெராத்
தினேஷ் சண்டிமால் விலகல்... இலங்கை அணிக்கு தலைமையேற்கிறார் ஹெராத்

இந்திய அணிக்கெதிரான டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் உடல்நலக்குறைவு காரணமாக இலங்கை அணியின் கேப்டன் தினேஷ் சண்டிமால் பங்கேற்க மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக இலங்கை கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதால் இந்திய அணிக்கெதிரான காலே டெஸ்ட் போட்டியில் கேப்டன் சண்டிமால் பங்கேற்க மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்குப் பதிலாக சுழற்பந்துவீச்சாளர் ரங்கனா ஹெராத் கேப்டன் பொறுப்பை ஏற்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், தினேஷ் சண்டிமால் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்பது சந்தேகமே என்று இலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தியா-இலங்கை அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி காலேவில் வரும் 26ல் தொடங்குகிறது. 

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com