
எதிர்வரும் 18 முதல் 24 மாத காலத்திற்குள் அரசாங்கத்தின் தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல்லின் 4ஜி சேவை வழங்கும் பணிகள் நிறைவடையும் என நாடாளுமன்றத்தில் மத்திய தொலைத்தொடர்பு துறை இணை அமைச்சர் சஞ்சய் தோத்ரே தெரிவித்துள்ளார்.
மேலும் பிஎஸ்என்எல் நிறுவனத்தை தனியார் வசம் ஒப்படைக்கும் திட்டம் அரசுக்கு இல்லை என அவர் தெரிவித்துள்ளார். இதனை எழுத்துப்பூர்வமாக அவர் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அரசு 4ஜி டெண்டருக்கான அழைப்பையும் விடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.