மதுரையில் கவனம் ஈர்த்த திமுக வேட்பாளரின் 'சிறப்பு' ஆட்டோ பிரசாரம்!

மதுரையில் கவனம் ஈர்த்த திமுக வேட்பாளரின் 'சிறப்பு' ஆட்டோ பிரசாரம்!
மதுரையில் கவனம் ஈர்த்த திமுக வேட்பாளரின் 'சிறப்பு' ஆட்டோ பிரசாரம்!

வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிப்பதற்காக, ஆட்டோவை திறந்தவெளி பிரசார வாகனமாக மாற்றி கவனம் ஈர்த்திருக்கிறார், திமுக வேட்பாளர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன்.

மதுரையில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பரப்புரை தீவிரமடைந்துள்ளது. அதிமுக, திமுக, அமமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர், சமக உள்ளிட்ட கட்சி வேட்பாளர்கள் பொதுமக்களிடம் வாக்கு சேகரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், மதுரை மத்திய தொகுதியில் திமுக சார்பில் 2-வது முறையாக போட்டியிடும் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் புதன்கிழமை தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அவர் இன்று முதல் பிரசாரத்தை துவக்கியுள்ளார்.

இந்தத் தொகுதிக்கு உள்பட்ட சிம்மக்கல், தைக்கையால் தெரு, பேச்சியம்மன் படித்துறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, ஏராளமான பெண்கள் அவருக்கு ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.

மதுரை மத்திய தொகுதி முழுவதும் குறுகிய வீதிகளை கொண்டுள்ளது என்பதால், குறுகிய வீதிகளில் சென்று பிரசாரம் மேற்கொள்ள ஏதுவாக ஓர் ஆட்டோவை திறந்தவெளி பிரசார வாகனமாக மாற்றி, குறுகலான வீதிகளில்கூட ஆட்டோவில் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

குறிப்பாக, அந்த ஆட்டோவை பிரசார வாகனமாக மாற்றியமைக்கப்பட்ட விதம், பொதுமக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது.

- கணேஷ்குமார்

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com