[X] Close

தேர்தல் முன்னெச்சரிக்கையாக 21,289 ரவுடிகள் மீது நடவடிக்கை!

சுடச்சுட

Election-precaution-21289-history-sheeter-got-actions-from-TN-Police

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு மாநிலம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 21 ஆயிரத்திற்கும் அதிகமான ரவுடிகள் மீது நடவடிக்கை எடுத்திருப்பதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement

தேர்தல் காலத்தில் எவ்வித அசம்பாவிதமும் ஏற்படாமல் இருக்க சரித்திர பதிவேடு ரவுடிகளை கண்டறிந்து அவர்களை கைது செய்யும் பணியில் காவல்துறையினர் இறங்கியுள்ளனர். அந்த வகையில் பிடியாணை குற்றவாளிகள் 14 ஆயிரத்து 343 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாகவும், 732 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

image


Advertisement

தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக நேற்றுவரை ஆயிரத்து 635 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல்துறையினரால் 9 ஆயிரத்து 104 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 9 ஆயிரத்து 95 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. அவர்களிடம் இருந்து ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 412 லிட்டர் தடை செய்யப்பட்ட மதுபானங்களை கைப்பற்றப்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பேரவைத் தேர்தலில் பிரச்னைக்குரிய மற்றும் பாதிக்கக் கூடியதாக 3 ஆயிரத்த 261 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் காவல்துறை கூறியுள்ளது. மொத்தத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 21 ஆயிரத்து 289 ரவுடிகள் மீது இதுவரை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.


Advertisement

Advertisement
[X] Close