
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் முகமது ஹனீப் சஹீல், பெட்ரோல் உயர்வை கண்டிக்கும் வகையில் தனது இருசக்கர வாகனத்தை தள்ளிக்கொண்டு வந்து வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. அரவக்குறிச்சி தொகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் முகமது ஹனீப் சஹீல் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்ய தனது ஆதரவளார்களுடன் வந்த அவர், பெட்ரோல் விலை உயர்வை கண்டிக்கும் வகையில் தனது இரு சக்கர வாகனத்தை தள்ளிக்கொண்டு வந்தார்.
இதுகுறித்து அவர் கூறும் போது, “பெட்ரோல் விலை உயர்வை கண்டித்தும், இந்த விலை உயர்வால் மக்கள் எதிர்கொண்டிருக்கும் பாதிப்பை உணர்த்தும் விதமாகஇருசக்கர வாகனத்தை தள்ளிக் கொண்டே வேட்புமனு தாக்கல் செய்ய வந்தேன்” என்றார்.