தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு மீண்டும் 1000ஐ நெருங்கும் வகையில் ஒரேநாளில் 945 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
படிப்படியாக குறைந்த கொரோனா பாதிப்பு மார்ச் 10ஆம் தேதி முதல் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கடந்த சில நாட்களாக தினசரி பாதிப்பு 800க்கு மேல் இருந்த நிலையில் இன்று 900ஐ தாண்டியுள்ளது. நீண்டநாட்களுக்குப்பின் இதுவரை இல்லாத வகையில் ஒரே நாளில் 945 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதுபற்றி சுகாதாரத்துறை, ’’தேர்தல் காலமானதால் பரப்புரைகளில் பங்குபெறும் மக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம் என வலியுறுத்தப்பட்டு வந்தாலும், பெரும்பாலும் அது கடைபிடிக்கப்படுவதில்லை என்பதே கொரோனா தொற்று அதிகரிப்புக்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது.
மேலும், கொரோனா குறித்த பயம் மக்களிடையே பெரும்பாலும் குறைந்துவிட்டது. அதேசமயத்தில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்தாலும் இறப்பு எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருக்கிறது. பரிசோதனை எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதால்தான் பாதிப்பு எண்ணிக்கையும் அதிகமாக பதிவாகி இருக்கிறது’’ என்று கூறியுள்ளது.
கொரோனா பாதிப்பின் இரண்டாம் அலை தொடங்கிவிட்டதாக நிபுணர்கள் தெரிவித்துவருகின்றனர்.
Loading More post
“என்னிடம் ஏன் இந்தக் கேள்வியை கேட்கிறீர்கள்?” - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆவேசம்
பிளே ஆஃப் வாய்ப்பு யாருக்கு? டெல்லிக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் பேட்டிங் தேர்வு!
ரோகித், கோலியின் மோசமான ஃபார்ம் குறித்து கவலையில்லை - பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி
பாகிஸ்தானில் இரண்டு சீக்கியர்கள் சுட்டுக் கொலை - இந்தியா கடும் கண்டனம்
சர்ச்சைக்கு மத்தியில் தாஜ்மஹாலின் பூட்டிய அறைகளின் படங்களை வெளியிட்டது தொல்லியல் துறை!
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்
“சிறப்பான விஷயம் நடக்கப்போகிறது என்று நினைத்தோம்.. ஆனால்” - கோலி குறித்து மைக் ஹெசன்
’டான்’ விமர்சனம்: ’டாக்டர்’ வெற்றியை தக்க வைத்தாரா சிவகார்த்திகேயன்?