பொன்ராம் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
விஜய் சேதுபதி நடிப்பில் மறைந்த இயக்குநர் எஸ்.பி ஜனநாதன் இயக்கத்தில் ‘லாபம்’, சீனு ராமசாமி இயக்கத்தில் ‘மாமனிதன்’ உள்ளிட்டப் படங்கள் விரைவில் வெளியாக இருக்கின்றன. கடைசியாக, மாஸ்டர் படத்தில் பவானி கேரக்டரில் வில்லனாக நடித்து மிரட்டினார். தெலுங்கிலும் விஜய் சேதுபதி வில்லனாக நடித்த ‘உப்பெனா’ படம் சூப்பர் ஹிட் அடித்தது.
இந்நிலையில், விஜய் சேதுபதி தமிழில் அடுத்ததாக நடிக்கும் படத்தின் அறிவிப்பை அதிகாரபூர்வமாக வெளியிட்டிருக்கிறது, படத்தை தயாரிக்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனம். தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் மோஷன் போஸ்டரில் காவல்துறை ஜீப்பும் கேப்பும் காட்டப்படுவதால் காவல்துறை சம்மந்தப்பட்டக் கதை என்பது தெளிவாகிறது.
’வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ’ரஜினி முருகன்’ ‘சீமராஜா’ வெற்றிப் படங்களை இயக்கி 100 சதவீத பொழுதுபோக்கு படத்திற்கு புகழ்பெற்ற பொன்ராம் - விஜய் சேதுபதி ‘விஜய் சேதுபதி 46’ படத்தில் இணைந்திருப்பதால் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. பொன்ராம் இயக்கத்தில் சசிக்குமார்-சத்தியராஜ்-சமுத்திரகனி நடித்துள்ள ’எம்.ஜி.ஆர்’ மகன் படம் விரைவில் திரையில் வெளியாகவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
We are happy to announce Makkal Selvan @VijaySethuOffl's #VJS46bySunPictures directed by @ponramVVS and music by @immancomposer.@kaarthekeyens @dineshkrishnanb @vivekharshan @onlynikil @StonebenchFilms pic.twitter.com/N4wq2zIvLU
Loading More post
லடாக்கில் வாகன விபத்து: 7 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு
சொத்துக்குவிப்பு வழக்கு: ஹரியானா முன்னாள் முதல்வர் ஓம்பிரகாஷ் சவுதாலாவுக்கு சிறை தண்டனை
‘சேத்துமான்’ OTT திரை விமர்சனம்: உணவு அரசியலை அலசியிருக்கும் ’ஸ்ட்ராங் மேன்’!
குடிநீரில் கலந்த கழிவுநீர்; மீனவ கிராமத்தை சேர்ந்த 11க்கும் மேற்பட்டோருக்கு தீவிர சிகிச்சை
பிரதமர் வருகையின்போது சந்தேகத்திற்கிடமாக பேசிய மாணவர்கள்; விசாரித்து அனுப்பிவைப்பு
‘சேத்துமான்’ OTT திரை விமர்சனம்: உணவு அரசியலை அலசியிருக்கும் ’ஸ்ட்ராங் மேன்’!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!