[X] Close

ஷர்துல் தாகூரின் மோசமான பீல்டிங்... அப்செட்டாகி நிதானத்தை இழந்த கோலி!

விளையாட்டு

Indian-Skipper-Virat-Kohli-lose-his-cool-after-Shardul-Thakur-s-lazy-in-fielding-against-England-Team-T20I-match

ஷர்துல் தாகூரின் மோசமான பீல்டிங்கால் விராட்கோலி நிதானத்தை இழந்தார்.


Advertisement

இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியுள்ளது. ஆட்டத்திற்கு பிறகு இந்திய அணியின் மோசமான பாடி லாங்குவேஜ்தான் வீழ்ச்சிக்கு காரணம் என கேப்டன் கோலி சொல்லியிருந்தார். 

இந்நிலையில் இந்திய வீரர் ஷர்துல் தாகூரின் மோசமான பீல்டிங்கால் அப்செட்டாகி நிதானத்தை இழந்துள்ளார் கேப்டன் கோலி. அதோடு ஷர்துல் தாகூரை திட்டியதாகவும் ரசிகர்கள் சிலர் ட்வீட் மூலம் தெரிவித்துள்ளனர். 


Advertisement

இந்திய அணி பீல்டிங் செய்தபோது இரண்டாவது இன்னிங்ஸின் 11-வது ஓவரில் இந்த சம்பவம் நடந்துள்ளது. டீப் திசையில் பீல்டிங் பணியை கவனித்துக் கொண்டிருந்த ஷர்துல், பந்தை துரிதமாக எடுத்து த்ரோ செய்ய தவறியதால் பட்லர் மற்றும் பேர்ஸ்டோ இணையர் சிங்கிள் ரன் எடுக்க வேண்டிய இடத்தில் இரண்டு ரன்கள் ஓடி எடுத்தனர். அதற்கு ஷர்துலின் பீல்டிங் தான் காரணம் என கோலி அவரிடம் கடிந்து கொண்டுள்ளார்.


Advertisement

Advertisement
[X] Close