[X] Close

புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தல் : நாராயணசாமி போட்டியிடவில்லை?

பொதுக்களம்

Former-Chief-Minister-of-Puducherry-V-Narayanasamy-did-not-contest-in-upcoming-Puducherry-Legislative-Assembly-Election-2021

புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும்14 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி பெயர் இடம்பெறவில்லை.


Advertisement

தமிழகத்துடன் சேர்ந்து யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி அன்று சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. புதுச்சேரியில் 15 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடும் நிலையில் ஏனாம் தொகுதிக்கு வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. புதுச்சேரியில் மொத்தம் 30 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. அதில் காங்கிரஸ் 15, திமுக 13, இந்திய கம்யூனிஸ்ட் 1 மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி 1 என காங்கிரஸ் கூட்டணி அமைத்து இந்த தேர்தலில் போட்டியிடுகிறது. 

ஏனாம் தொகுதிக்கு வேட்பாளர் அறிவிக்கப்படாத நிலையில் அங்கு முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமிக்கு வாய்ப்பு அளிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


Advertisement

கடந்த 2016 தேர்தலில் போட்டியிடாத நாராயணசாமியை புதுச்சேரி முதல்வராக அறிவித்தது அகில இந்திய காங்கிரஸ் தலைமை. தொடர்ந்து அதன் பின்னர் நடைபெற்ற இடைத்தேர்தலில் நாராயணசாமி நெல்லித்தோப்பு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 


Advertisement

Advertisement
[X] Close