Published : 21,Jul 2017 09:39 AM
பள்ளி சீருடையில் வரும் தலைமை ஆசிரியர்

மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் இடையே வேறுபாடு இருக்கக் கூடாது என்பதற்காக காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அரசு பள்ளியின் தலைமை ஆசிரியர் பள்ளி சீருடையில் வருகிறார்.
மாற்றுத்திறனாளியான ஸ்ரீதர், தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற்ற நாள் முதல், மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இடையே வேறுபாடு இருக்கக் கூடாது என்பதற்காக மாணவர்கள் அணியும் சீருடையிலேயே பள்ளி வந்து செல்கிறார். அத்துடன், ஆரம்பக் கல்வியை தரமாகவும் வழங்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
இவர் கடந்த பத்து ஆண்டுகளாக இடைநிலை ஆசிரியராகப் பணியாற்றி வந்தார். 4 ஆண்டுகளுக்கு முன் தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற்று மதுராந்தகத்தில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இடையே வேறுபாடு இருக்கக் கூடாது, ஆசிரியர் மீது மாணவர்களுக்கு உள்ள அச்சத்தைப் போக்க நண்பர்கள் போல இருக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறார். மாணவர்கள் முடித்திருத்தம் செய்யாமல் வந்தால் அவர்களுக்கு முடித்திருத்தம் செய்ய அவரே பணம் கொடுத்து உதவுகிறார். மேலும் அப்பள்ளியை ஸ்மார்ட் வகுப்பாக மாற்றவும், ஆரம்பக் கல்வியைத் தரமாக வழங்கவும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். பள்ளி சீருடையில் வரும் தலைமை ஆசிரியரை அந்த கிராம மக்கள் பாராட்டி வருகின்றனர். இதுபோன்ற ஆசிரியர்கள் இருந்தால் அரசுப் பள்ளிகள் தனியார் பள்ளிகளை மிஞ்சும் என சமூக ஆர்வலர்கள் கருத்துக் கூறுகின்றனர்.