Published : 15,Mar 2021 08:37 PM

”அன்பே அமுதே ஆருயிரே; வலிமை அப்டேட் செய்த சாமியே; போனி கபூருக்கு ரசிகர்கள் போஸ்டர்!

Ajith-fans-poster-for-Boney-Kapoor-

அஜித்தின் ’வலிமை’ அப்டேட் கேட்டு வந்த ரசிகர்களுக்கு ‘வலிமை’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் தேதியை தயாரிப்பாளர் போனி கபூர் இன்று அறிவித்ததையடுத்து அஜித் ரசிகர்கள் போனி கபூருக்கு, மகிழ்ச்சியில் போஸ்டர் அடித்து நன்றி தெரிவித்து வருகிறார்கள்.

‘நேர்கொண்ட பார்வை’ வெற்றிக்குப்பிறகு அஜித்,ஹெச்.வினோத், போனி கபூர் கூட்டணி ‘வலிமை’ படத்தில் இணைந்துள்ளது. அஜித்துக்கு ஜோடியாக ஹீமா குரேஷி நடிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தின் அப்டேட்டை கடந்த ஒரு வருடமாக ரசிகர்கள் கேட்டுவந்த நிலையில், தயாரிப்பாளர் போனிகபூர் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில், அஜித்தின் 50-வது பிறந்தநாளையொட்டி  ’வலிமை’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார். இதனால், அஜித் ரசிகர்கள் உற்சாகத்திலும் மகிழ்ச்சியிலும் இருக்கிறார்கள்.

image

இதில் நெகிழ்ந்த போன மதுரையைச் சேர்ந்த ரசிகர் ஒருவர், ”அன்பே அமுதே ஆருயிரே.. ”போனியே தல 60 வலிமை அப்டேட் 3 மணிக்கு ட்வீட் செய்த சாமியே” என்று போனி கபூரின் ட்வீட்டையும் போஸ்டரில் இணைத்து நன்றி தெரிவித்துள்ளனர் மதுரையைச் சேர்ந்த தூங்கா நகரம் அஜித் பேன்ஸ். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்