Published : 15,Mar 2021 06:49 PM

ஈபிஎஸ் சொத்து ரூ.1 கோடி குறைவு; ஓபிஎஸ் சொத்து, கடன் பலமடங்கு உயர்வு!

EPS-assets-at-least-Rs-1-crore--OPS-Property--Debt-Multiply-

முதல்வர் பழனிசாமி சொத்து ரூ.1 கோடி குறைந்தும், துணை முதல்வர் ஓபிஎஸ் சொத்து, கடன் பல மடங்கு அதிகரித்தும் உள்ளது.

எடப்பாடி தொகுதியில் போட்டியிடும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சொத்து மதிப்பு ரூ.1 கோடி குறைந்துள்ளது. 2016-ஆம் ஆண்டு ரூ.3.14 கோடியாக ஆக இருந்த அசையும் சொத்து, 2021-ல் ரூ 2.01 கோடியாக ஆக குறைந்துள்ளது. அதேபோல, 2016-ஆம் ஆண்டு ரூ.4.66 கோடியாக இருந்த அசையா சொத்து 2021 ஆம் ஆண்டில் 4.68 கோடியாக இருக்கிறது.

அதேபோல, போடி தொகுதியில் போட்டியிடும் துணை முதல்வர் ஓபிஎஸ் சொத்து, கடன் பலமடங்கு உயர்ந்துள்ளது. துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த வேட்புமனுவில் இடம்பெற்றுள்ள சொத்து விவரம்,

 image

அசையும் சொத்து 5 ஆண்டுகளில் 843% உயர்வு கண்டுள்ளது. அசையும் சொத்து 2016-ல் ரூபாய் 55 லட்சம் ஆக இருந்த நிலையில் 2021ல் ரூ.5.19 கோடியாக உயர்வு கண்டுள்ளது.

அசையா சொத்து 5 ஆண்டில் 169% உயர்ந்துள்ளது. அசையா சொத்து 2016-ல் ரூபாய் 98 லட்சமாக இருந்தது. அதுவே 2021ல் ரூபாய் 2.64 கோடியாக உயர்வு கண்டுள்ளது. கடன் அளவும் 988% அதிகரித்துள்ளது. ஓ.பன்னீர்செல்வத்தின் கடன் -2016-ல் ரூ25 லட்சம் ஆக இருந்த நிலையில், 2021ல் ரூ.2.72 கோடியாக அதிகரிப்பு கண்டுள்ளது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்