[X] Close

"அதிமுக தேர்தல் அறிக்கையும் ரஜினி மாதிரி!" - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

சுடச்சுட

ADMK-election-manifesto-is-like-Rajini-says-Mafoi-Pandiyarajan

முதலில் வில்லனாக வந்து ஹீரோவாக மாறிய ரஜினி போன்றது அதிமுகவின் தேர்தல் அறிக்கை என்று தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் துரைமுருகன் கருத்துக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

திமுக தேர்தல் அறிக்கை கதாநாயகன் போன்றது என்றும் அதிமுக தேர்தல் அறிக்கை வில்லன் போன்றது என்றும திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கருத்து தெரிவித்தார். இதற்கு பதிலடி கொடுக்கும்படியாக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பேசியுள்ளார். ஆவடி சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிடும் அவர் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பாண்டியராஜன் "அதிமுக தேர்தல் அறிக்கை முதலில் ரஜினி திரைத்துறையில் வில்லனாக வந்து பின்னர் ஹீரோவாக ஆகியது போன்றது. முதலில் வில்லன் போன்றும் பின்னர் ஹீரோவாகவும் அதிமுக தேர்தல் அறிக்கை தெரியும். ஆனால் திமுக தேர்தல் அறிக்கை செகண்ட் ஹீரோவாக உள்ளது" எனக் கூறினார்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close