[X] Close

நாக்பூர் : தற்கொலை முயற்சியை ஃபேஸ்புக் லைவில் ஸ்ட்ரீம் செய்த பாடகர்!

இந்தியா

Nagpur-Singer-attempts-for-suicide-and-live-streamed-it-through-Facebook

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரை சேர்ந்த பாடகர் ஒருவர் நிதி சிக்கலினால் தற்கொலை செய்து கொள்ள முயன்றுள்ளார். அதனை சமூக வலைத்தளமான ஃபேஸ்புக் பக்கத்தில் லைவ் வீடியோவாக ஸ்ட்ரீம் செய்துள்ளார்.


Advertisement

கொரோனா பெருந்தொற்று காரணமாக அமலாகியிருந்த ஊரடங்கினால் கடுமையான நிதி சிக்கலுக்கு ஆளான அவர் தற்கொலைக்கு முயன்றுள்ளார் என போலீசார் தெரிவித்துள்ளனர். “அவர் தற்கொலைக்கு முயன்றபோது அவர் பிள்ளைகளும், மனைவியும் உதவி வேண்டி கதறியுள்ளனர். அவரது வீடியோவை லைவில் பார்த்த அவரது நண்பர்கள் சிலர் துரிதமாக பாடகரின் வீட்டுக்கு வந்து அவரை காத்துள்ளனர்” என அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 

ஊரடங்கினால் பாதிக்கப்பட்ட பாடகர்களுக்கு உதவ வேண்டி அரசு அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்த பாடகர்கள் குழுவில் தற்கொலைக்கு முயன்றவரும் இருந்துள்ளார். தனது கை நரம்பை துண்டித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார் அவர்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close