Published : 14,Mar 2021 11:02 AM

இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் காலமானார்!

Tamil-Director-SP-Jananathan-passed-away-today-in-Chennai

உடல் நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பிரபல திரைப்பட இயக்குநர் எஸ்.பி,ஜனநாதன் (61) மாரடைப்பால் காலமானார்.

தேசிய விருது பெற்ற 'இயற்கை' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் கவனிக்கப்பட்டவர் எஸ்.பி.ஜனநாதன். 'ஈ', 'பேராண்மை' படங்கள் மூலம் தன்னை தனித்துவமான இயக்குநராக நிறுவியர். இவரது இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் 'லாபம்' திரைப்படம் விரைவில் வெளியாகவிருக்கிறது. அண்மையில் மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டதால் சென்னை கிரீம்ஸ் ரோடு அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகள் பரவிக்கொண்டு வந்தன.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்