[X] Close

”முதலில் எடிப்பாடியார் வாழ்க; அடுத்து மருத்துவர் ஐயா வாழ்க” - எம்எல்ஏ குன்னம் ராமசந்திரன்

சுடச்சுட

Ariyalur---kunnam-AIADMK-candidate-gave-tips-to-volunteers

 "எடப்பாடியார் வாழ்க என்று சொன்னால் உடனே பாமகவினர் ராமதாஸ் வாழ்க என சொல்ல வேண்டும்" என்று குன்னம் தொகுதி அதிமுக வேட்பாளர் ராமசந்திரன் தொண்டர்களுக்கு டிப்ஸ் கொடுத்துள்ளார்.

அரியலூர் மாவட்டம் செந்துறையில் அதிமுக கூட்டணி கட்சியின் பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய குன்னம் அதிமுக வேட்பாளர் ராமசந்திரன் ‘அதிமுகவும் திமுகவும் கணவன் மனைவி போல் பழகவேண்டும்’ என்று பேசியுள்ளளார்.

மேலும், ராமசந்திரன் பேசுகையில், ”எங்கள் கட்சி தேர்தலில் நிற்கிறது. எங்கள் கட்சி மாவட்ட செயலாளர் நிற்கின்றார் என கூறி பா.ம.க தொண்டர்கள் உறவில் அதிமுக கீழ் மட்ட தொண்டர்கள் சிலர் விரிசல் ஏற்படுத்துகின்றனர்  என எனக்கு தகவல் வருகின்றது.


Advertisement
image

அதிமுக , பா.ம.க கணவன், மனைவி போல பழக வேண்டும். அண்ணன் எடப்பாடியார் வாழ்க என்று சொன்னால் உடனே பா.ம.கட்சியினர் மருத்துவர் ராமதாஸ் வாழ்க என சொல்ல வேண்டும்.அண்ணன் ஓ.பி.எஸ் வாழ்க என்று சொன்னால் உடனே மருத்துவர் சின்ன அய்யா வாழ்க என்று சொல்ல வேண்டும். இதே போல் இருவரும் ஒன்று சேர்ந்து உழைக்க வேண்டும்” என்று அவர், கூறினார்.


Advertisement

Advertisement
[X] Close