[X] Close

நடிகர் ஆஷிஷ் வித்யார்த்திக்கு கொரோனா தொற்று!

சினிமா

Actor-Ashish-Vidyarthi-tests-Covid19-positive-hospitalised

பிரபல நடிகர் ஆஷிஷ் வித்யார்த்திக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.


Advertisement

தமிழில் 'பாபா', 'ஏழுமலை', 'பகவதி', 'தமிழன்' உள்ளிட்ட பல படங்களில் வில்லனாக நடித்து பிரபலமான ஆஷிஷ் வித்யார்த்தி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக ஆஷிஷ் வித்யார்த்தி அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட பதிவில், “ இது நான் விரும்பாத ஒன்று. நான் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளேன். என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுங்கள். தற்போது கொரோனா அறிகுறிகள் இல்லை. விரைவில் குணமடைவேன் என்று நம்புகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.


Advertisement

அவர் வெளியிட்ட வீடியோவில், “ டெல்லியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறேன். நலமாக உள்ளேன்” என்று கூறியுள்ளார்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close