Published : 12,Mar 2021 04:50 PM
’பிக்பாஸ்’ தர்ஷன் –லாஸ்லியா நடிக்கும் படத்தின் புதிய அப்டேட்!

’பிக்பாஸ்’ புகழ் தர்ஷன் லாஸ்லியா நடிக்கும் ‘கூகுள் குட்டப்பன்’ படத்தின் புதிய அப்டேட் வெளியாகி இருக்கிறது.
மலையாளத்தில் சுரஜ் வெஞ்சிராமூடு நடிப்பில், இயக்குநர் ரத்தீஷ் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் உருவான ‘ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் வெர்ஷன் 5.25 படம்’ சூப்பர் ஹிட் அடித்தது.
பாசத்திற்காக ஏங்கும் தந்தை, மகன் கொண்டு வரும் ரோபோவுடன் நட்பாவதே கதை. இதனை நெகிழ்ச்சியான சுவாரசியமான திரைக்கதையால் இயக்கியிருந்தார் ரத்தீஷ்.
இப்படத்தை தமிழி ரீமேக்கை இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் தயாரிக்கிறார். அவரின் உதவி இயக்குநர்கள் சபரி மற்றும் சரவணன் இயக்குகின்றனர். தயாரிப்பதோடு தர்ஷனுக்கு அப்பாவாக ரவிக்குமார் நடிக்கிறார். இவர்களுடன் லாஸ்லியாவும் நடிக்கிறார். துணை கதாபாத்திரத்தில் நடிகர் யோகி பாபுவும், வில்லனாக ப்ராங்ஸ்டர் ராகுலும் நடிக்கின்றனர்.
ஜிப்ரான் இசையமைக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி 15 முதல் தென்காசி, குற்றாலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்நிலையில்,படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்புகள் முடிவடைந்து புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
படத்தில் மிக முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரத்தில் ரோபோ ஒன்று நடிக்க உள்ளது. அதிகப்படியான வி.எப்.எக்ஸ் காட்சிகளும் இடம்பெறுகின்றன.” என்றார்.