மகன்கள் கடனை அடைக்க மறுத்ததால் மனமுடைந்த பெற்றோர் தற்கொலை

மகன்கள் கடனை அடைக்க மறுத்ததால் மனமுடைந்த பெற்றோர் தற்கொலை
மகன்கள் கடனை அடைக்க மறுத்ததால் மனமுடைந்த பெற்றோர் தற்கொலை

பெற்ற மகன்களே கடனைக்கட்ட மறுத்ததால் மனமுடைந்த தாயும், தந்தையும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கடலூர் மாவட்டத்தில் நிகழ்ந்துள்ளது.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பை அடுத்த பு.ஆதனூர் கிராமத்தைச் சேர்ந்த கந்தசாமி என்‌பவர், தனியார் நிதி நிறுவனத்தில் கட‌ன் பெற்று தனது இரண்டு மகன்களுக்கும்‌ வீடு கட்டிக் கொடுத்துள்ளார். இதற்கான மாதத் தவணையை கந்தசாமியே செலுத்தி வந்த நிலையில், அவரு‌க்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அவர் பணிக்கு செல்ல முடியாத சூழலும் ஏற்பட்ட‌‌து. ‌இந்நிலையில், அவர்களுடைய மகன்களுக்குள் ஏற்பட்ட போட்டி காரணமாக தந்தை வாங்கிய கடனைக் கட்ட அவர்கள் இருவரும் மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த கந்தசாமியும் அவரது மனைவி ரெங்கநாயகியும் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com