Published : 12,Mar 2021 07:06 AM

"நாங்கள் கேட்ட ஓரிரு தொகுதிகள் கிடைக்கவில்லை" - சிபிஎம் போட்டியிடும் 6 தொகுதிகள் வெளியீடு

Release-of-6-constituency-in-which-CPIM-competes

திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் ஆறு தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி அக்கட்சி திருப்பரங்குன்றம், கந்தர்வக்கோட்டை, திண்டுக்கல், கோவில்பட்டி, அரூர், கீழ்வேளூர் ஆகிய தொகுதிகளில் போட்டியிட உள்ளன. இதில் கோவில்பட்டி தொகுதியில், அமைச்சர் கடம்பூர் ராஜூ, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை எதிர்த்து மார்க்சிஸ்ட் களம் காண்கிறது.

தொகுதிகளை ஒதுக்கீடு செய்வது தொடர்பாக நேற்றிரவு திமுக மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் ஒப்பந்தம் கையெழுத்தானது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், தாங்கள் கேட்ட ஓரிரு தொகுதிகள் கிடைக்கவில்லை என்றும் இன்று வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் எனவும் கூறினார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்