அமமுக கூட்டணியில் எஸ்டிபிஐ கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு

அமமுக கூட்டணியில் எஸ்டிபிஐ கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு
அமமுக கூட்டணியில் எஸ்டிபிஐ கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு

அமமுக கூட்டணியில் இடம்பிடித்துள்ள எஸ்டிபிஐ கட்சிக்கான தொகுதிகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

அமமுக கூட்டணியில் எஸ்டிபிஐ வரும் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்கிறது. இந்நிலையில் அக்கட்சிக்கு 6 தொகுதிகளை அமமுக ஒதுக்கியது. அதன்படி, ஆலந்தூர்,ஆம்பூர்,திருச்சி மேற்கு,மதுரை மத்தி, திருவாரூர், பாளையங்கோட்டை ஆகிய தொகுதிகளில் எஸ்டிபிஐ போட்டியிடவுள்ளது.

மக்கள் நீதி மய்யத்துடன் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் அமமுக கூட்டணிக்கு மாறியது எஸ்டிபிஐ குறித்து விளக்கம் அளித்த அக்கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக், தமிழகத்தை பொறுத்தவரை பாஜகவை தீவிரமாக எதிர்க்க கூடிய கட்சியாக அமமுக உள்ளது என்றும் திமுக மட்டுமே பாஜகவை எதிர்க்கும் கூட்டணி என்று தாம் நினைக்கவில்லை என்றும் தெரிவித்தார். 

முன்னதாக கூட்டணியில் உள்ள ஓவைசி கட்சிக்கு கட்சிக்கு 3 தொகுதிகளை ஒதுக்கிய அமமுக, மருது சேனை சங்கம் மற்றும் கோகுல மக்கள் கட்சிக்கு தலா ஒரு தொகுதியை ஒதுக்கியது. மேலும் விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சிக்கு ஒரு தொகுதியும், மக்களரசு கட்சிக்கு ஒரு தொகுதியும் ஒதுக்கீடு செய்து ஒப்பந்தம் கையெழுத்தாகியது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com