[X] Close

கொரோனா பணியா, தேர்தல் பணியா? - தவிக்கும் சென்னை மாநகராட்சி!

தமிழ்நாடு

Chennai-corporation-in-struggle-between-covid-and-election-duties

தேர்தல் பணியா, கொரோனா தடுப்பு பணியா எதற்கு முக்கியத்துவம் அளிப்பது எனத் தெரியாமல் சென்னை மாநகராட்சி தவித்து வருகிறது.


Advertisement

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட கோடம்பாக்கம், தேனாம்பேட்டை, அயனாவரம், அம்பத்தூர் உள்ளிட்ட மண்டலங்களில் குடும்பம் குடும்பமாக கொரோனா தொற்று பரவி வருகிறது. இந்நிலையில், 300-க்கும் மேற்பட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் தேர்தல் பணியில் நியமிக்கப்பட்டுள்ளதால், கொரோனா தடுப்புப் பணியில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஒருவருக்கு தொற்று ஒருவருக்கு ஏற்பட்டால், அவரை தனிமைப்படுத்துவது, அவருடைய குடும்பத்தினருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்வது போன்ற பணிகளிலும், கொரோனா தடுப்பூசி பணிகளிலும் தொய்வு ஏற்பட்டுள்ளது.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close