[X] Close

32 வருடங்கள் கற்களை சாப்பிட்டு உயிர்வாழும் மனிதர்! மகாராஷ்டிரா கிராமத்தில் ஆச்சர்யம்

இந்தியா

Man-lives-by-eating-stones-for-past-32-years-in-Maharashtra

இந்த உலகில் பல்வேறு விதமான பொருட்களை சாப்பிட்டு உயிர்வாழும் மனிதர்களைப் பற்றி நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் 32 வருடங்களாக கற்களை சாப்பிட்டே ஒரு மனிதர் வாழ்ந்துகொண்டிருக்கிறார் என்ற செய்தி கேட்பவரை ஆச்சர்யப்படத்தான் வைக்கிறது. மகாராஷ்டிரா மாநிலம் சாத்ரா மாவட்டத்திலுள்ள ஆதர்கி குர்த் கிராமத்தைச் சேர்ந்தவர் ராம்தாஸ் போத்கே. 78 வயதான போக்தே தினமும் 250 கிராம் கற்களை உணவாக உண்டு உயிர்வாழ்ந்து வருகிறார்.


Advertisement

பல வருடங்களுக்கு முன்பு போக்தேக்கு தீவிர வயிற்றுவலி ஏற்பட்டிருக்கிறது. அந்த வலி போக பலவிதமான மருந்துகளை எடுத்திருக்கிறார். ஆனால் வலி சரியாகாமல் போகவே, தனது கிராமத்திலிருந்த ஒரு பெண் கற்களை சாப்பிடும்படி ஆலோசனை கூறியிருக்கிறார். அதன்படி, அவர் கற்களை சாப்பிட்டபிறகுதான் வயிற்றுவலி குணமாகியிருக்கிறது. அதிலிருந்து போக்தே கற்களை தொடர்ந்து சாப்பிட ஆரம்பித்திருக்கிறார்.

image


Advertisement

சமீபத்தில், போக்தே கற்களை சாப்பிட்ட வீடியோ இணையத்தில் பரவி வைரலானது. போக்தேவின் குடும்பத்தார் அவர் கற்கள் சாப்பிடுவதை தடுப்பதால், அவர்களுக்கு தெரியாமல் சாப்பிட்டு வருகிறார். போக்தே கற்கள் சாப்பிடுவது மனநல பிரச்னையாக இருக்கும் என்கின்றனர் மருத்துவர்கள்.


Advertisement

Advertisement
[X] Close