[X] Close

தொகுதி சிக்கல்: காங். எதிராக திமுக, பாஜக எதிராக அதிமுக தொண்டர்கள் ஆர்ப்பாட்டம்

சுடச்சுட

AIADMK-DMK-cadres-hold-protest-against-alliance-party-seat-allocation

கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்க எதிர்ப்பு தெரிவித்து கோவையில் அதிமுகவினரும், அறந்தாங்கியில் திமுகவினரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


Advertisement

அதிமுக கூட்டணியில் உள்ள பாஜகவுக்கு, கோவை தெற்கு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், அங்கு அக்கட்சியின் தேசிய மகளிர் அணித் தலைவர் வானதி சீனிவாசன், போட்டியிட உள்ளதாகவும் கூறப்படுகிறது. தற்போது கோவை தெற்கு எம்.எல்.ஏ.வாக, அதிமுகவைச் சேர்ந்த அம்மன் அர்ஜுனன் உள்ள நிலையில், தொகுதியை பாஜகவுக்கு வழங்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்து அதிமுக நிர்வாகிகள் கோவை ஓசூர் சாலையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பா.ஜ.க.வுக்கு கோவை தெற்கு தொகுதியை ஒதுக்கினால், நிர்வாகிகள் அனைவரும் ராஜினாமா செய்யவிருப்பதாகவும் அவர்கள் கூறினர்.


Advertisement

புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கி தொகுதி, காங்கிரஸுக்கு ஒதுக்கப்படுவதாக தகவல் வந்ததை அடுத்து திமுகவினர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வழக்கமாக அறந்தாங்கி சட்டப்பேரவைத் தொகுதியை கடந்த காலங்களில் திமுக, தனது கூட்டணி கட்சிக்கே ஒதுக்கிவந்தது. ஆனால் இம்முறை திமுகவே போட்டியிட வேண்டும் என கட்சியினர் வலியுறுத்துகின்றனர். இதற்காக அறந்தாங்கி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்து 57 பேர் விருப்பமனு அளித்துள்ளனர். இந்த நிலையில் அறந்தாங்கி தொகுதி, காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்வதாக வந்த தகவலையடுத்து, பேருந்து நிலையம் அருகே திரண்ட திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


Advertisement

Advertisement
[X] Close