Published : 20,Jul 2017 02:18 PM
அந்த நாள் ஞாபகம் வந்ததே... பிரதமர் மோடி நெகிழ்ச்சி

குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ராம்நாத் கோவிந்துடன் தான் கொண்டுள்ள நீண்ட கால நட்புறவை வெளிப்படுத்தும் வகையில் 20 ஆண்டுகளுக்கு முன்பு எடுத்த புகைப்படத்தை பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
ராம்நாத் கோவிந்தோடு பணியாற்றும் தருணங்கள் எப்போதுமே சிறப்பானவை எனவும் பிரதமர் மோடி அதில் குறிப்பிட்டுள்ளார். அண்மையில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றையும் அந்த ட்விட்டில் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார். நாட்டின் 14ஆவது குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ராம்நாத் கோவிந்த், வரும் 25ல் பதவியேற்க உள்ளார்.