
தமிழகத்தில் டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் பரவாமல் தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டிருப்பதாக தமிழக சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பரவி வரும் வைரஸ் காய்ச்சல் குறித்து எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த ராதாகிருஷ்ணன், காய்ச்சல் ஏற்பட்டால் மருத்துவரை அணுகுவது, தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்வது போன்ற சின்ன சின்ன நடவடிக்கைகள் மூலம் காய்ச்சல் பரவுவதை தடுக்கமுடியும் என கூறினார். காய்ச்சல் குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதாக கூறிய அவர், காய்ச்சல் பரவாமல் தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.
இதனிடையே, மதுரை மாவட்டம் மேலூர் அருகே காய்ச்சல் பாதிப்புடன் சிகிச்சைப்பெற்று வந்த பள்ளி மாணவி ஒருவர் இன்று உயிரிழந்தார். மேலும் கோவை மாவட்டம் முழுவதும், காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் அங்குள்ள அரசு மருத்துவமனையில் 89 பேர் காய்ச்சல் பாதிப்பால் அனுமதிக்கப்பட்டுள்ளனர்