Published : 09,Mar 2021 10:13 PM

முதலமைச்சர் வேட்பாளர் யார்?: புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக இடையே தொடரும் குழப்பம்

புதுச்சேரியில் முதல்வர் வேட்பாளர் யார் என்ற கேள்விக்கு எம்எல்ஏ-க்கள் முடிவு செய்வார்கள் என்று பதில் வந்ததால் சலசலப்பு ஏற்பட்டது.

புதுச்சேரியில் இழுபறியாக நீடித்த பாஜக, என்ஆர் காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தை முடிந்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதன்படி, என்ஆர்.காங்கிரஸுக்கு 16 தொகுதிகளும், பாஜக, அதிமுகவுக்கு 14 தொகுதிகள் என உடன்பாடு கையெழுத்தானது
கூட்டணி குறித்து அறிவிப்பு வெளியிட்ட பாஜக மேலிட பார்வையாளர் நிர்மல்குமார் சுரானாவிடம் முதலமைச்சர் வேட்பாளராக யாரை முன்னிறுத்துவீர்கள்? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது, தேர்வு செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் முதலமைச்சரை முடிவு செய்வார்கள் என தெரிவித்தார்.

image

அப்போது அங்கு இருந்த என்ஆர்.காங்கிரஸ் தொண்டர்கள், முதலமைச்சராக ரங்கசாமியை அறிவிக்க வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதனால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது. உடனே ரங்கசாமி தொண்டர்களை கடிந்து கொண்டார்.

காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்து முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்ட நமச்சிவாயம் இந்த நிகழ்வில் பங்கேற்கவில்லை.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்